அனுப்பம்பட்டு ஊராட்சியில் வெளிமாநில மக்களுக்கு கொரோனா பரிசோதனை
அனுப்பம்பட்டு ஊராட்சியில் வெளிமாநில மக்களுக்கு  கொரோனா பரிசோதனை 

 

 திருவள்ளூர் மாவட்டம்  மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், தங்கியுள்ள வெளிமாநில மக்களுக்கு கொரோனா தொற்று பற்றியுள்ளதா என பரிசோதிக்க வேண்டி அனுபம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு சுகாதார துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்து இருந்தார். அதனை தொடர்ந்து, மீஞ்சூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் வெளிமாநில மக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்தனர். மேலும் அவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரைகளையும் வழங்கபட்டது. உடன் இருந்த அனுப்பம்பட்டு கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலங்களில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினார் . 

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />